படவிழாவில் அமிதாப்பச்சனுக்கு கவுரவம்

50-வது ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

Update: 2019-11-07 00:00 GMT
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன் விழா என்பதால் திரைப்படத்துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதை வழங்க இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். எந்த தேதியில் இந்த விருது வழங்கப்படும் என்பதை தற்போது அறிவித்து உள்ளனர். 20-ந்தேதி சர்வதேச திரைப்பட தொடக்க விழா நடக்க உள்ளது.

இதில் ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவிலேயே ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. எனவே அவரையும் திரைப்பட விழாவில் கவுரவிக்கின்றனர்.

ரஜினிகாந்தும் அமிதாப்பசனும் திரைப்பட விழாவில் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.

மேலும் செய்திகள்