கணவரின் காதலியை ரேவதி என்ன செய்தார்?

தமிழ்நாட்டின் பிரபலமான எழுத்தாளர் பிரகாஷ்ராஜ். அவர் எழுதிய `மோகனப் புன்னகை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. அந்த விருதை டெல்லியில் வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்புகிறார்.

Update: 2019-11-22 09:29 GMT
பிரகாஷ்ராஜ் நேராக வீட்டுக்கு செல்லாமல் தனது காதலியும், கல்லூரி தோழியுமான அர்ச்சனாவை பார்க்க வருகிறார்.இருவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள். 

எழுத்துலகில் தான் பெற்ற அத்தனை சிறப்புகளுக்கும் அர்ச்சனாதான் காரணம் என்பதையும், அவரை திருமணம் செய்யாததற்கு தன் தைரியம் இல்லாமைதான் காரணம் என்பதையும் கூறி, பிரகாஷ்ராஜ் வருத்தப் படுகிறார். எல்லாவற்றையும் பேசிவிட்டு, தூங்க சென்றவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்.

அக்கம்பக்கம் உள்ள எல்லோரும் அவர் மரணம் அடைவதற்கு காரணம் அர்ச்சனாதான் என்று பேசி, அவர் மனதை நோகடிக்கிறார்கள். இந்த நிலையில், அர்ச்சனாவை பார்க்க பிரகாஷ்ராஜின் மனைவி ரேவதி வருகிறார். அவர் என்ன சொல்வாரோ என்ற பதற்றத்தில் இருக்கிறார், அர்ச்சனா. அவரை ரேவதி என்ன செய்தார்? என்பது நெகிழவைக்கும் காட்சியாக இருக்கும்'' என்கிறார், `அழியாத கோலங்கள்-2' படத்தின் டைரக்டர் எம்.ஆர்.பாரதி.

``இந்த படத்தை வள்ளியம்மை அழகப்பன் வெளியிடுகிறார். படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது'' என்றும் டைரக்டர் எம்.ஆர்.பாரதி கூறினார்.

மேலும் செய்திகள்