அமிதாப்பச்சனுடன் நடித்த ‘ஷோலே’ பட நடிகை மரணம்

பிரபல இந்தி நடிகை கீதா. இவர் 1972-ல் பரிச்சாய் என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன.

Update: 2019-12-16 23:17 GMT
1973-ல் வெளியான ‘ஹரம் ஹவா’ படத்தின் வெற்றி அவரை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஹரம் ஹவா படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் கீதா கதாபாத்திரத்துக்கு பாராட்டுகளும் கிடைத்தன. அவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. அதன் பிறகு அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 1970 மற்றும் 80-களில் அதிகமான இந்தி படங்களில் நடித்தார்.

ஷோலே, ராம் தெரி கங்கா மைலி, டிஸ்கோ டான்ஸர், நூரி, காசம் படா ஹர்னே வாலே, ஆர்த், தேஷ் பிரேமி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். பின்னர் ஆவணப்பட இயக்குனரான சித்தார்த் காக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

கீதாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். கீதா மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்