சரித்திர கதையில் அர்ஜுன்

அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் வரும் அர்ஜுன் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Update: 2020-01-22 23:00 GMT
கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கை அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற பெயரில் சினிமா படமாகிறது.

இந்த படத்தில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரமாக இது இருக்கும் என்கின்றனர். இந்த படம் ரூ.100 கோடி செலவில் தயாராகிறது. பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மோகன்லால், கீர்த்தி சுரேஷ் தோற்றங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் வரும் அர்ஜுன் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் சமீப காலமாக மற்ற கதாநாயகர்கள் படங்களில் குணசித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.

விஷாலின் இரும்புத்திரையில் அவரது வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. அரபிக்கடலிண்டே சிம்ஹம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்