வைரலாகும் அஜித்தின் வலிமை படத்தின் புதிய தோற்றம்?

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Update: 2020-02-21 10:51 GMT
சென்னை

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வேகமாக தயாராகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.  அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமாருக்கு சண்டைக் காட்சியில், கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது என செய்திகள் வெளியானது.

தற்போது நடிகர் அஜித் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதில் அஜித்தின் கெட்டப் குறித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் தனது உதவியாளரின் திருமணத்தில் பங்கேற்றார் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

இதில் அஜித்தினுடைய கெட்டப் குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஷார்ட் பிரவுனி ஹேர், கிளீன் ஷேவ் என அஜித்தின் நியூ லுக் அடங்கிய புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ஒருவேளை வலிமை படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடிக்கிறாரோ என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்