கூடுதல் ஆஸ்பத்திரிகள் வேண்டும் - நடிகர் பார்த்திபன்

கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆஸ்பத்திரிகள் வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-25 00:40 GMT

“இந்த கிருமி யுத்தம் உலக யுத்தத்தைவிட கொடுமையாக உள்ளது. கொரோனா வைரசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியான மருத்துவமனைகள் இல்லை என்பது பெரிய துயரம். இத்தாலி போன்ற வசதியான நாட்டிலேயே அதை செய்ய முடியவில்லை என்று சொல்லும்போது, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் அதை செயல்படுத்துவது மிக கடினமானது. எனக்கு ஒரு சிறிய யோசனை. இந்த அவசர நிலையை எதிர்கொள்ள மருத்துவ வசதியை கொடுக்கும் சிறுசிறு இடங்களை நாம் உருவாக்க முடியும். எம்.எல்.ஏ. விடுதி, அரசு அலுவலகங்கள் மாதிரியான இடங்களில் அவசர சிகிச்சைக்கான வார்டுகளை உருவாக்கலாம். தெருமுனைகள் 24 மணிநேர ஆஸ்பத்திரியை உருவாக்கலாம். எனக்கு கே.கே நகரில் 3 பிளாட்கள் இருக்கிறது. அந்த பிளாட்களை நான் கொடுத்து உதவலாம். இந்த மாதிரி இரு வீடுகள் வைத்திருப்பவர்கள் ஒரு வீட்டை தற்காலிக ஆஸ்பத்திரிக்கு கொடுக்கலாம். இது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. இது எனது ஒரு யோசனை.

மேலும் செய்திகள்