4 நாள் முழு ஊரடங்கு: இது மிகவும் மோசமான யோசனை - நடிகை வரலட்சுமி டுவீட்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு மோசமான யோசனை என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

Update: 2020-04-25 10:17 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

ஆனால் அதற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், மக்கள் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதற்காக மார்க்கெட்டுகள் மற்றும் காய்கறிகடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். 

காஞ்சிபுரத்தில் பெரும்பாலான மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். அதே நேரத்தில் சமூக விலகல் என்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை வரலட்சுமி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கூட்டமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள வரலட்சுமி, 

லாக்டவுன்குள்ள லாக்டவுனா? இது மிகவும் மோசமான யோசனை, முற்றிலும் திட்டமிடப்படாத நடவடிக்கை.. இது மேலும் மோசமாக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்