ஊரடங்கு உத்தரவு, பொதுமக்களுக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது - நடிகர் பார்த்திபன் கருத்து

ஊரடங்கு உத்தரவு, பொதுமக்களுக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-29 04:58 GMT
சென்னை,

‘கொரோனா’ மற்றும் ஊரடங்கு பற்றியும், ஜோதிகா பேச்சு பற்றியும் நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறியதாவது:-

கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக செயல்பட்டவர்கள், ஊடக துறையினர். தங்கள் உயிரை பணயம் வைத்து, செய்திகளை சேகரித்து கொண்டுவந்து மக்களிடம் சேர்க்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. அணுசக்தி போரை விட, செய்தித்தாள் சக்தி வாய்ந்தது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவினால் நிறைய பேருக்கு நன்மைகளும் நடந்துள்ளன. குடும்பத்தினருடன் பலர் மகிழ்ச்சியுடன் இருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள். என்னைப்போல் சிலரை உடற்பயிற்சி செய்ய தூண்டி இருக்கிறது. நிறைய பேர் வாழ்க்கையில் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு ஆஸ்பத்திரிகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. இதற்கிடையில், ஜோதிகா பேச்சு ஏற்படுத்திய பரபரப்புக்குப்பின், தஞ்சை அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட கலெக்டர் வந்து பார்வையிட்டு இருக்கிறார். எங்களைப் போன்ற பிரபலங்கள் செய்கிற உதவிகளை விட, பொதுமக்கள் செய்யும் உதவிகள் பாராட்டுக்குரியது. மனிதம் வளர்ப்போம்.

இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

மேலும் செய்திகள்