புதிதாக யு-டியூப் சேனலை தொடங்கிய மலைவாழ் பாடகி நஞ்சம்மா

புதிதாக யு-டியூப் சேனல் ஒன்றை பாடகி நஞ்சம்மா தொடங்கி உள்ளார்.

Update: 2020-05-04 06:48 GMT
சென்னை,

சமீப காலமாக புதிய திறமைகளை பிரபலமாக்குவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகித்துவருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை பூர்வீமாக கொண்டு கேரளாவின் மலைவாழ் பகுதியில் வசிப்பவர் நஞ்சம்மா (வயது 60) அட்டப்பாடியில் வசித்து வரும் நஞ்சம்மா என்ற பழங்குடிப் பெண் தனது ஒரு பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.  அய்யப்பனும் கோஷியமும் என்ற படத்தில் படத்தில் இவர் பாடிய களக்காத்த சந்தனமேரம் என்ற பாடல் 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு-டியூப்பில் பெற்றது.

இந்தநிலையில், இப்போது இவர் புதிதாக யு-டியூப் சேனல் ஒன்றை பாடகி நஞ்சம்மா என்ற பெயரில் கடந்த வாரம் துவங்கி உள்ளார். பழங்குடி மக்களின் கலாச்சாரம், விவசாய நடைமுறைகள், வாழ்க்கை அனுபவங்கள், சமையல் நடைமுறைகள் மற்றும் சுதேச மருத்துவம் பற்றிய தகவல்களை நஞ்சம்மா பகிர்ந்து கொள்வார் என்றும்,அவர்களின் பாடல்கள் உள்ளிட்ட பலவற்றை இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

அட்டப்பாடியில் உள்ள நாக்குபதி பிரிவு எனும் பகுதியில் மகள், மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரோடு வசித்து வரும் நஞ்சம்மா, கால்நடை வளர்ப்பின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்