விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது - நடிகை தமன்னா

விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Update: 2020-05-07 09:40 GMT
சென்னை,

விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல எல்.ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் 5000த்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எல்.ஜி பாலிமர் தொழிற்சாலைக்கு அருகே பல குடியிருப்புகள் இருந்ததால், விபத்தில் கசிந்த விஷ வாயு அருகில் இருந்த கிராமம் வரை பரவி பல ஆயிரக் கணக்கான மக்களின் சுவாசத்தை பாதித்து மூச்சுத் திணறல் ஏற்படுத்தியது.

இந்த விஷவாயு விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் ரசாயன ஆலையில் இருந்து எப்படி இவ்வளவு விஷவாயு பரவியது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த செய்தி அறிந்த நடிகை தமன்னா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-  காலையில் எழுந்தவுடனே விசாகப்பட்டினம் விஷ வாயு சம்பவம் நெஞ்சை பதற வைத்து விட்டது.

விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தால் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டோர், உடல் நிலை குணமாகி மீண்டு வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

விஷ வாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவலை அறிந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்