உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் - வைரமுத்து

உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என வைரமுத்து கூறியுள்ளார்.

Update: 2020-05-19 22:45 GMT
சென்னை,

விவசாயிகளுக்கு வழங்கிவரும் இலவச மின்சாரத்தை நிறுத்தி, அதற்கு பதிலாக நேரடியாக வங்கிகளில் பணம் செலுத்தும் முறையை கடைபிடிக்கவேண்டும் என்று மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் எனவும், உழவர்களின் அடிமடியில் கை வைத்தால், அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்