டிஸ்கவரி நிகழ்ச்சி வர்ணனையாளராக மாறிய பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் டிஸ்கவரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறி உள்ளார்.

Update: 2020-05-27 13:33 GMT
பெங்களூரு,

ரஜினிகாந்தின் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 24 இரவு ஒளிபரப்பானது. கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்த இந்தப் படப்பிடிப்பில் ரஜினியின் சாகசங்களை ரசிகர்கள் நிஜத்தில் பார்த்து ரசித்தனர்.

டிஸ்கவரி சேனல், டிஸ்கவரி ஹெச்.டி, டி தமிழ், அனிமல் பிளானட், அனிமல் பிளானட் ஹெச்.டி, டி.எல்.சி, டி.எல்.சி எச்டி, இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி, இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரி ஹெச்.டி, டிஸ்கவரி டர்போ, டிஸ்கவரி கிட்ஸ் உள்ளிட்ட 12 டிஸ்கவரி சேனல்களில் ரஜினிகாந்தின் இந்நிகழ்ச்சி மார்ச் 23 இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.

இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட எட்டு மொழிகளில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பானது. அந்த எபிசோடும் பரவலான வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் டிஸ்கவரியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் இது ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக நான் மாறப்போகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த சிரமப்பட்டு இயற்கை வன ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதற்கு நான் குரல் கொடுத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் குரல் கொடுத்திருப்பது அனுபவம் என்றும் பகிர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ். வைல்ட் கர்நாடகா எனும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்