தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் வாழ்க்கை சினிமா படமாகிறது

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை சினிமா படமாக உள்ளது.

Update: 2020-06-21 23:15 GMT

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சமீபத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. இந்தியில் வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்படுகிறது.

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்க்கை கதையான ‘எம். எஸ். தோனி த அன்ட் டோல்டு ஸ்டோரி‘ படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். மொத்தம் 11 படங்களில் அவர் நடித்து இருந்தாலும் தோனி படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த நிலையில் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்கப்போவதாக இயக்குனர் ஷாமிக் மவுலிக் அறிவித்துள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாமிக் மவுலிக் கூறும்போது, “சுஷாந்த் சிங் வாழ்க்கை கதை படத்துக்கு கொலையா? தற்கொலையா என்று பெயர் வைத்துள்ளோம். சுஷாந்த் சிங்குக்கு இழைத்த அநீதிகளையும் அவரது தற்கொலைக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்த படம் இருக்கும்“ என்றார். நிகில் ஆனந்த் என்ற இன்னொரு இயக்குனரும் சுஷாந்த் சிங் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்