நடிகைகளிடம் குறுக்கு விசாரணை -மீண்டும் தீவிரமாகும் திலீப் வழக்கு

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளது.

Update: 2020-06-23 23:05 GMT

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகையை 2017-ம் ஆம் ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம்பிடித்த சம்பவம் திரையுலகை உலுக்கியது. கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்தார்.

இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தினமும் சாட்சிகள் வாக்குமூலம் அளித்து வந்தனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சில நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

நடிகர் லால், இடைவேளை பாபு ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி விசாரணையை நிறுத்தி வைத்தனர். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளது. ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் குறுக்கு விசாரணை நடக் கிறது.

மேலும் செய்திகள்