விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்

இணைய தள கலந்துரையாடலில் நடிகர் விஜய்சேதுபதி தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Update: 2020-07-09 06:36 GMT
நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணைய தள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது:-

“கதாநாயகனாகும் முன்பு தெருவில் யாருக்கும் தெரியாத சாதாரண ஆளாக சுற்றினேன். அதன்பிறகு நடிகனானேன். எனவே கதாநாயகன் என்ற இமேஜில் சிக்க விரும்பவில்லை. அதில் சிக்கினால் வெளியே வர முடியாது. கதாநாயகன் இமேஜில் சிக்க கூடாது என்றுதான் சூதுகவ்வும் படத்தில் நடித்தேன். ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும். ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக மாற்றி விடுவார். ஒரு காட்சி நன்றாக வந்துவிட்டால் இயக்குனரை பாராட்டுவார். ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசித்து செய்கிறார். சுற்றி இருக்கும் நடிகர்களையும் கவனிப்பார். என்றுமே அவர் மாஸ்டர்தான். நான் நடித்த 96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. அந்த படத்தில் நடித்த மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் பள்ளி கல்லூரியில் படித்த போது எனக்கு கூச்ச சுபாவம் இருந்தது. 96 படத்தின் கதையில் ஜீவன் இருந்ததால் பெரிய வெற்றி பெற்றது.”

இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.

மேலும் செய்திகள்