ரெஜினாவின் கொரோனா ஊரடங்கு அனுபவம்

நடிகை ரெஜினா தனது கொரோனா ஊரடங்கு அனுபவம் பற்றி விளக்குகிறார்.

Update: 2020-09-12 00:04 GMT
சென்னை,

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜ தந்திரம், அழகிய அசுரா, சரவணன் இருக்க பயமேன், மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரெஜினா கசாண்ட்ரா அளித்த பேட்டி வருமாறு:-

“கொரோனா ஊரடங்கில் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்ட உணர்வு ஏற்படுகிறது. சில மாதங்களாக எங்கும் போகமுடியவில்லை. நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலேயே முடங்கி உள்ளேன். சினிமாவில் பிசியாக நடித்ததால் வளர்ப்பு பிராணிகளை கூட வீட்டில் வைத்துக்கொள்ளவில்லை. இப்போது கொரோனா நேரத்தில் ஒரு நாய் குட்டி வாங்கி வளர்த்து அதோடு நேரத்தை செலவிடுகிறேன். எனது குடியிருப்பில் உள்ளவர்களோடும் நிறைய நேரத்தை கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீட்டு பக்கத்தில் இருக்கும் குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர்களோடும் நேரம் செலவிட்டேன். நானும் குழந்தை மாதிரி அவர்களோடு விளையாடினேன். டி.வி.யில் படங்கள் பார்த்தேன். நள்ளிரவில் சீட்டு விளையாடினோம். மாலை நடைபயிற்சி செய்கிறேன். ஓய்வுக்கு பிறகு செய்ய வேண்டியதையெல்லாம் முன்கூட்டியே ஊரடங்கு செய்ய வைத்து விட்டது. இது ரொம்ப கொடுமையானது.”  இவ்வாறு ரெஜினா கூறினார்.

மேலும் செய்திகள்