53 வயதில் நுழைவுத்தேர்வு எழுதிய நடிகை

ஜனசேனா கட்சி சார்பில் 2014-ல் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மண்டபேட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Update: 2020-09-28 22:45 GMT
பிரபல குணசித்திர நடிகை ஹேமா. இவர் தமிழில் ஈரமான ரோஜாவே, விஷால், நயன்தாராவுடன் சத்யம், பிரஷாந்தின் சாகசம், பிரபுதேவாவின் தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் சங்க துணைத்தலைவராகவும் இருக்கிறார்.

ஜனசேனா கட்சி சார்பில் 2014-ல் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மண்டபேட்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஹேமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்ததால் அவரால் அதிகம் படிக்க முடியவில்லை. இந்த நிலையில் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் எம்.ஏ. படிக்க முடிவு செய்தார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். இதற்கான நுழைவுத்தேர்வு ஐதராபாத்தில் நடந்தது. இதில் ஹேமா கலந்துகொண்டு தேர்வு எழுதினார். 53 வயதிலும் ஹேமா படிப்பில் ஆர்வம் காட்டுவதற்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்