கொரோனா நிவாரண உதவிகள் நடிகர் சோனுசூட்டுக்கு ஐ.நா. மனிதநேய விருது

சோனுசூட் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கி இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

Update: 2020-09-30 23:00 GMT
தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த சோனுசூட் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கி இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். தற்போது அவரது சேவைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சோனுசூட்டை கவுரவப்படுத்தும் வகையில் ஐ.நா. சார்பில் சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த விருதை ஹாலிவுட் பிரபலங்கள் லியனார்டோ டிகாப்ரியோ, ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “எனது நாட்டு மக்களுக்காக இயன்ற உதவிகள் செய்தேன். இதற்காக ஐ.நா. விருது கிடைத்து இருப்பது பெரிய அங்கீகாரம், ஐ.நா முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவையும் கொடுப்பேன்” என்றார்.

சோனுசூட்டுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில், “இந்த விருதை பெற நீங்கள் தகுதியானவர். உங்களுடைய தெய்வீக பணியை தொடர்ந்து செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்