380 படங்களில் நடித்து ராதிகா சரத்குமார் சாதனை முதன் முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்

380 படங்களில் நடித்து ராதிகா சரத்குமார் சாதனை முதன் முதலாக நகைச்சுவை வேடத்தில் நடித்தார்

Update: 2020-10-10 23:00 GMT
‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தில் கதாநாயகியாக டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகம் செய்யப்பட்ட ராதிகா சரத்குமார், இதுவரை 380 படங்களில் நடித்து இருக்கிறார். அவர் நடிக்காத வேடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார்.

அவருடைய 380-வது படம், ‘அனபெல் சுப்பிரமணியம்.’ இதில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கி வருகிறார். கதாநாயகியாகவும், அம்மா வேடங்களிலும் 379 படங்களில் நடித்த ராதிகா சரத்குமார், தனது 380-வது படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது, இதுவே முதல்முறை. கனமான கதாபாத்திரங்களில் மட்டுமல்ல...‘காமெடி’ வேடத்திலும் திறமையான நடிப்பை வழங்க முடியும் என்று அவர் நிரூபித்து இருக்கிறார்.

படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில், “ஆயிரம் நிலவே வா” பாடல் காட்சி படமாக்கப்பட்ட ஜெய்ப்பூர் அரண்மனையில், ‘அனபெல் சுப்பிரமணியம்’ படப்பிடிப்பு நடந்தது. அதில், ராதிகா சரத்குமார் 20 நாட்கள் கலந்துகொண்டு நடித்தார்.

மேலும் செய்திகள்