அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் அக்சராஹாசனை நடிக்க வைத்தது ஏன்?- டைரக்டர் விளக்கம்

கமல்ஹாசனின் 2-வது மகளான அக்சராஹாசன் இசை, உதவி டைரக்டர் என பணிபுரிந்து வந்துள்ளார்.

Update: 2020-10-17 23:30 GMT
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கமல்ஹாசனின் 2-வது மகளான அக்சராஹாசன் இசை, உதவி டைரக்டர் என பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர் ‘கடாரம் கொண்டான்’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

 அதைத்தொடர்ந்து இப்போது, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அவர் 19 வயது கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். ராஜா ராமமூர்த்தி டைரக்டு செய்துள்ளார். ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்துக்கு குறிப்பாக அக்சராஹாசனை தேர்வு செய்தது ஏன்? என்று டைரக்டர் ராஜா ராமமூர்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“கதையின் நாயகி பவித்ரா 19 வயது கல்லூரி மாணவி. எல்லா பெண்களுக்கும் வருவது போல் அவளுக்கும் பிரச்சினை வருகிறது. இந்த கதாபாத்திரத்துக்கு அக்சராஹாசன் பொருத்தமாக இருந்தார். படக்குழுவினரில் என்னை தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பெண்கள். அமெரிக்காவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டிருப்பது, இன்னொரு சிறப்பு அம்சம்.

படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். டீசரை சுருதிஹாசனும், முதல் தோற்றத்தை விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். ‘பவித்ரா’ கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள டிரைலர் தூண்டும். அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள். படத்தில் அக்சராஹாசனின் பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் நடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்