மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த லாவண்யா

நடிகர், நடிகைகள் பலர் விளம்பர படங்களில் நடித்து கோடி, கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.

Update: 2020-11-30 01:12 GMT
சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பரம் செய்யவும் பெரிய தொகை கேட்கிறார்கள்.  சிலர் நுகர்வோரை ஏமாற்றும் சர்ச்சை விளம்பரங்களில் நடிப்பதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. கோர்ட்டும் கண்டித்து இருக்கிறது. இந்த நிலையில் நடிகை லாவண்யா திரிபாதி மதுபான விளம்பர படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இவர் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக வந்தார். தொடர்ந்து மாயவன் படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். லாவண்யா திரிபாதியை சில மதுபான நிறுவனங்கள் அணுகி தங்கள் மதுபானத்தை விளம்பரப்படுத்தும் படத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தன. பெரிய தொகையை சம்பளமாக தருவதாகவும் ஆசை காட்டின. ஆனால் மதுபானம் உள்ளிட்ட போதை பொருளை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்