அவதூறு வழக்கு: நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்

இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார்.

Update: 2021-01-21 22:30 GMT
தமிழில் தாம்தூம் படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். கங்கனா அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்றார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் சாடினார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதுபோல் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கங்கனா ரணாவத் ஜூஹூ போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜராக (22-ந்தேதி) வேண்டும் என்று மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சர்ச்சை கருத்துக்கள் பதிவிடுவதாக வந்த புகாரின் பேரில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்