அவதூறு வழக்கு: கங்கனா ஆஜராக கோர்ட்டு சம்மன்

ஜாவித் அக்தர் தன்னை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Update: 2021-02-03 00:59 GMT
தமிழில் தாம்தூம் படத்தில் நாயகியாக நடித்துள்ள கங்கனா ரணாவத் தற்போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் உள்ளது என்று கங்கனா ஏற்கனவே சாடினார். மராட்டிய அரசையும், மும்பை போலீசையும் குறை சொன்னார்.

மேலும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை விமர்சித்தபோது அமைதியாக இருக்கும்படி இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தன்னை மிரட்டினார் என்றும் கங்கனா குற்றம் சாட்டினார். இதனை மறுத்த ஜாவித் அக்தர் தன்னை அவதூறாக பேசியதாக கங்கனா ரணாவத் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த ஜூஹூ போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. கங்கனா ரணாவத் போலீஸ் நிலையத்தில் ஆஜராக மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கங்கனா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்