போட்டி சங்கம் தொடங்கிய பாரதிராஜா அணிக்கு நோட்டீஸ்

பாரதிராஜா தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் போட்டியாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

Update: 2021-03-03 02:44 GMT
பாரதிராஜா தலைமையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் போட்டியாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றார். பாரதிராஜா சங்கத்தில் இருப்பவர்கள் மீண்டும் தாய் சங்கத்தில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து பாரதிராஜா சங்கத்தினருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் மன்னன் கூறும்போது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தாய் சங்கம். கொரோனா பரவல் நேரத்தில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கினார். தற்போது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தாய் சங்க நிர்வாகம் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக இருந்து கொண்டு போட்டியாக சங்கம் நடத்துவது முறையல்ல. எனவே பாரதிராஜா தவிர்த்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். விளக்கம் பெற்ற பிறகு சங்க விதியின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

மேலும் செய்திகள்