தேர்தலில் போட்டியா? நடிகர் மம்முட்டி விளக்கம்

மலையாள நடிகர் மம்முட்டி அரசியலில் குதித்து கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின.

Update: 2021-03-11 01:15 GMT
மலையாள நடிகர் மம்முட்டி அரசியலில் குதித்து கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் அவர் சேர இருப்பதாக கூறப்பட்டது. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. அதில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். பினராயி விஜயனை மம்முட்டி நேரிலும் சந்தித்து பேசினார். இதை வைத்து அவரது கட்சியில் இணைய இருப்பதாக பேசப்பட்டது.

இதற்கு பதில் அளித்து மம்முட்டி கூறும்போது, “நான் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. எந்த கட்சியும் என்னை அணுகவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்படி சொல்லவும் இல்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்த திட்டமும் என்னிடம் இல்லை. எனது திரைப்படங்கள் மூலம் பயற்சி பெறுவதுதான் எனக்கு தெரிந்த அரசியல். கொரோனா காலத்தில் திரையுலகுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் வாழ்வாதாரமும் சிரமத்துக்கு உள்ளானது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்