சிக்கலில் கமலின் இந்தியன் 2

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு தடங்கல்கள் தொடர்கிறது. 2019-ல் படவேலைகளை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர்.

Update: 2021-04-30 06:34 GMT
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்துக்கு தடங்கல்கள் தொடர்கிறது. 2019-ல் படவேலைகளை தொடங்கியபோது கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படப்பிடிப்பை நிறுத்தினர். பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியபோது, கிரேன் சரிந்து உயிரிழப்புகள் ஏற்பட்டதால் முடங்கியது. தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் படப்பிடிப்புக்கு தடை போட்டது.

அதன்பிறகு கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இறங்கியதால் படப்பிடிப்பு அப்படியே நின்றது. தேர்தல் முடிந்ததும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் விக்ரம் என்ற பெயரில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இயக்குனர் ஷங்கரும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அதோடு இந்தியில் ரன்வீர்சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யப் போவதாகவும் அறிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சியான பட நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்கும்படி கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இந்த பிரச்சினையில் கோர்ட்டு அறிவுறுத்தல்படி இருதரப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்தியன் 2 படத்தின் கதி என்ன? படம் கைவிடப்படுமா? என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்