கங்கனா ரணாவத் மீது மீண்டும் வழக்கு பதிவு

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார்.

Update: 2021-05-09 21:25 GMT
மராட்டிய அரசையும் சாடினார். இதனால் மும்பை போலீசார் கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்ததை கண்டித்து கங்கனா ரணாவத் டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிட்டார். வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும், மம்தா பானர்ஜிக்கு மோடி பதிலடி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகளை பகிர்ந்தார். கங்கனாவின் பதிவுகள் டுவிட்டர் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கங்கனா ரணாவத் வன்முறையை தூண்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீது கொல்கத்தா போலீசார் 153 ஏ. 504, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கங்கனா கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கங்கனா கூறும்போது, ''இதுபோன்ற நாடகங்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்'' என்றார்.

மேலும் செய்திகள்