தயாரிப்பாளர் ஆனார் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா!

பன்மொழி சினிமாக்களின் இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்.

Update: 2021-06-27 00:20 GMT
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுன், மோகன்லால், சல்மான்கான் ஆகிய நட்சத்திர நடிகர்களை வைத்து படங்களை டைரக்டு செய்தவர் இவர்.

ரஜினிகாந்துக்கு ‘பாட்சா’, கமல்ஹாசனுக்கு ‘சத்யா’ என இருவருக்குமே மைல் கல் படங்களை கொடுத்தவர் இவர்தான். சுமார் 40 படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, ‘சின்னத்திரை’யிலும் தொடர்களை கொடுத்தார். இப்போது அவர் வெப் சீரிஸ் தளத்தில் இறங்கி இருக்கிறார். ‘இன் த நேம் ஆப் காட்’ என்ற பெயரில் தெலுங்கில் ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்துள்ளார்.

‘வெப் சீரிஸ்’ பற்றி அவர் கூறுகிறார்:

‘‘காலமாற்றத்தில், ஒரு புதிய காட்சி வடிவம்தான் இந்த ‘வெப் சீரிஸ்.’ சினிமா மற்றும் டி.வி. தொடர்கள் உருவாக்குவதில் இல்லாத சுதந்திரமும், காட்சி பிரமாண்ட சாத்தியமும் வெப் சீரிஸ் தளத்தில் உள்ளது. எந்த சமரசமும் இல்லாமல் நினைத்ததை அப்படியே இதில் கொண்டுவர முடியும். இந்த வெப் சீரிசை நானே தயாரித்து இருக்கிறேன்.

ஒரு அப்பாவி மனிதன், எந்த வம்புதும்புக்கும் செல்லாதவன், சமூக அழுத்தத்தாலும், நெருக்குதலாலும் எப்படி வன்முறை பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்து செல்லப்படுகிறான்? என்பது கதை. அந்த வன்முறை உலகத்தில் விழுந்தவன் எப்படி அதை எதிர்கொள்கிறான்? என்பதே திரைக்கதை.

தெலுங்கு நடிகர்கள் பிரியதர்சி, நந்தினி, பூரணி ஆகியோர் நடித்துள்ளனர். படம் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் வளர்ந்து இருக்கிறது.’’

மேலும் செய்திகள்