வரதட்சணைக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகர் மோகன்லால்

கேரளாவில் வரதட்சணை கொடுமைக்கு ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பெண்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-27 23:44 GMT
சமீபத்தில் கொல்லத்தை சேர்ந்த விஸ்வமயா விநாயர் என்ற 22 வயது பெண் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. வரதட்சணை புகாரில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருவனந்தபுரத்தில் அர்ச்சனா என்ற 24 வயது பெண் வரதட்சணை கொடுமையால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆலப்புழாவில் சுசித்ரா என்ற பெண்ணும் வரதட்சணை கொடுமைக்கு பலியாகி உள்ளதாக புகார் கூறப்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வரதட்சணை வேண்டாம் என்று அதற்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களுக்கு சம உரிமையும் நீதியும் கிடைக்கக்கூடிய ஒரு கேரளாவை உருவாக்க முன்வருவோம்' என்று கூறியுள்ளார். அதோடு, ‘பெண்களுக்கு கல்யாணம் மட்டும் லட்சியம் இல்லை. அவர்கள் சுதந்திரமாக இருப்பது முக்கியம். அவர்களை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் சுயமாக வாழ வேண்டும்'' என்று இளம் பெண்களிடம் பேசும் வீடியோ காட்சியையும் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்