பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த முன்னணி நடிகர்கள்

கொரோனா ஊரடங்கு தளர்வில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Update: 2021-07-31 22:16 GMT
இந்த படத்துக்காக நடிகர்கள் ஏற்கனவே தலைமுடியை நீளமாக வளர்த்து தயாராகி உள்ளனர். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடியும் வரை வேறு படங்களில் அவர்களால் நடிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும், ஒரே நேரத்திலேயே படமாக்கி வருகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தாய்லாந்து காடுகளில் நடத்தினர். ஊரடங்கு தளர்வில் புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

கொரோனா 2-வது அலையால் நிறுத்தி வைத்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. அனைத்து நடிகர்- நடிகைகளையும் வைத்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இந்த படப்பிடிப்பில் பங்கேற்க விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, அர்ஜூன் சிதம்பரம், லால், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளும், துணை நடிகர்களும் ஐதராபாத் படப்பிடிப்பு அரங்கில் குவிந்துள்ளனர். ஓரிரு தினங்களில் திரிஷாவும், படப்பிடிப்பில் இணைகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த வருடம் ஆரம்பத்தில் முதல் பாகத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்