ரூ.20 கோடி வரி ஏய்ப்பா? நடிகர் சோனு சூட் விளக்கம்

ரூ.20 கோடிக்கு அதிகமாக சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து சோனுசூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

Update: 2021-09-21 12:48 GMT
தமிழில் ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனுசூட். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

இந்தநிலையில் மும்பை உள்பட சோனுசூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி ரூ.20 கோடிக்கு அதிகமாக சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சோனுசூட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் எப்போதும் உங்கள் தரப்பு விஷயத்தை சொல்லத் தேவை இல்லை. காலம் அதை உணர்த்தும். நான் மக்கள் சேவைக்காக வலிமையோடும், தூய்மையான மனதோடும் என்னை அர்ப்பணித்து இருக்கிறேன். எனது தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் உயிர்களை காப்பாற்றவும், தேவையானவர்களுக்கு உதவவும்தான் இருக்கிறது. எனக்கு விளம்பரங்கள் மூலமாக வரும் வருவாயை கூட மனிதாபிமான காரியங்களுக்காக கொடுத்து இருக்கிறேன். எனது பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்