நடிகர்களும், விளம்பர படங்களும்...

விளையாட்டு வீரர்களைப்போல் சில இந்தி நடிகர் - நடிகைகளும் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். தமிழ் சினிமா நடிகர்களில் பெரும்பாலான நடிகர்கள், விளம்பர படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள்.

Update: 2021-10-03 04:11 GMT
ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்கள், விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் இருந்து வருகிறார்கள். விஜய் சேதுபதி தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விளம்பர படங்களாக இருந்தாலும் சரி, பெரிய சம்பளம் கொடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறார். அவர் தற்போது வேளச்சேரியில் ஒரு ‘மால்’ கட்டி வருவதாகவும், அதற்கு பெரிய தொகை தேவைப்படுவதால் நிறைய திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடிக்க சம்மதிப்பதாக பேசப்படுகிறது.

‘‘ஏழை எளியவர்களின் மருத்துவ செலவு, மாணவர்களுக்கு கல்வி செலவு என விஜய் சேதுபதி சத்தமே இல்லாமல் உதவி வருகிறார். திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக நேற்று அவர் ரூ.1 கோடி வழங்கினார். இது யாரும் செய்திராத பெரிய உதவி. இப்படி பலருக்கு உதவுவதற்காகவே நிறைய திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் அவர் நடிக்கிறார்’’ என்கிறார்கள் விஜய் சேதுபதியின் உதவியாளர்கள்.

மேலும் செய்திகள்