இணையத்தில் வைரலான அஜித்தின் வலிமை பட தோற்றங்கள்

அஜித்தின் வலிமை பட புகைப்படங்களை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Update: 2021-10-07 08:27 GMT
அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இதில் நாயகியாக கியூமா குரோஷி வருகிறார். வினோத் இயக்கி உள்ளார். படத்தில் அதிரடி சண்டை காட்சிகளும், மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. சண்டை காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கி உள்ளனர். வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ஏற்கனவே வலிமை படத்தின் போஸ்டரும், நாங்க வேற மாறி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் அஜித் குமார் கருப்பு கண்ணாடி அணிந்து கம்பீரமாக நிற்பது, சுமித்ரா, கியூமா குரோஷி, வினோத் போன்றோருடன் இருப்பது, மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் உடை அணிந்து மிடுக்காக வருவது போன்ற புதிய வலிமை புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்