வலைத்தள அவதூறுகள்: நடிகை சமந்தா வருத்தம்

நடிகை சமந்தாவின் விவாகரத்தை வலைத்தளங்கள் அவதூறாக சித்தரித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சில யுடியூப் சேனல்கள் மீது சமந்தா நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2021-10-24 22:54 GMT
இந்த நிலையில் வலைத்தளங்கள் குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘சமூக வலைத்தளங்களால் எவ்வளவு லாபம் உள்ளதோ அந்த அளவுக்கு நஷ்டமும் உள்ளது. நாம் இப்போது டிஜிட்டல் உலகில் இருக்கிறோம். இந்த காலத்திலும் சமூக வலைத்தளத்தை விட்டு விலகி இருக்கவே தோன்றுகிறது.

 சமூக வலைத்தளத்தில் வரும் பதிவுகள் எல்லை மீறி போகும் அளவுக்கு இருக்க கூடாது. கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சமூக வலைத்தளத்தில் வரும் பதிவுகளை பற்றி பேசுவதை விட சிலமுறை மவுனமாக இருப்பதே நல்லது. பதில் சொல்ல வேண்டி வந்தால் அது மவுனத்தை விட பலமாக இருக்க வேண்டும். 

தென்னிந்திய படங்களில் நான் பிசியாக இருந்தபோது இந்தி பட வாய்ப்புகள் வந்தன. எனவே அப்போது நிராகரித்தேன். ஆனால் பேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜி கதாபாத்திரத்தை ரசிகர்கள் வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இத்தொடர் எனக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.


மேலும் செய்திகள்