சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது

நடிகர் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-29 04:41 GMT
சென்னை,

டைரக்டர் வெற்றிமாறன் தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

படக்குழு  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன், உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்