கமல்ஹாசனின் 'விக்ரம் திரைப்படத்தின் புதிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி 'விக்ரம்' திரைப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகியுள்ளது .

Update: 2021-11-07 05:09 GMT
சென்னை  

நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’.  இப்படத்தில்  விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர்  கமல்ஹாசன்  தனது பிறந்தநாளை நவம்பர் 7 இன்று கொண்டாடுகிறார். கமல்ஹாசன்  பிறந்தநாளையொட்டி  படக்குழுவினர் 'விக்ரம்'  திரைப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ  தற்போது யூடியூப்  டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
.

மேலும் செய்திகள்