மம்முட்டி நடிப்பில் இந்தியாவின் முதல் ஐந்தாம் பாகம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்

‘சி.பி.ஐ. டைரி குறிப்பு, ஒரு துப்பறியும் படம். முதன் முதலாக மலையாளத்தில் தயாராகி வெளிவந்த இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூலில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.

Update: 2021-11-24 12:22 GMT

திருவனந்தபுரம்

‘சி.பி.ஐ. டைரி குறிப்பு, ஒரு துப்பறியும் படம். முதன் முதலாக மலையாளத்தில் தயாராகி வெளிவந்த இந்த படம், கேரளாவில் வெற்றிகரமாக ஓடி, வசூலில் முந்திய சாதனைகளை முறியடித்தது.

அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகங்கள் வெளிவந்தன. நான்கு பாகங்களும் வெற்றி பெற்றன.4 பாகங்களிலும் மம்முட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார். 

 முதல் பாகம் ஒரு சிபிஐ டைரிக் குறிப்பு 1988 இல் வெளிவந்தது. இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989 ஆம் வருடமும், மூன்றாம் பாகம் சேதுராம ஐயர் சிபிஐ 2004 ஆம் வருடமும், நான்காவது பாகம் நேரறியான் சிபிஐ 2005 ஆம் வருடமும் வெளியானது. இந்த நான்கு பாகங்களிலும் மம்முட்டி சேதுராம ஐயர் என்ற சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக முகேஷும், ஜெகதி ஸ்ரீகுமாரும்.

நவம்பர் 29 ஆம் தேதி இதன் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். மம்முட்டி தனது பழைய வேடத்தை இதிலும் தொடர்கிறார். வழக்கம் போல் எஸ்.என்.சுவாமி கதை எழுத, கே.மது படத்தை இயக்குகிறார். முந்தைய பாகங்களில் ஜெகதி ஸ்ரீகுமார் மாறுவேடங்களில் சென்று புலனாய்வு செய்யும் காட்சிகள் ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கும்.

இந்தமுறை அவர் படத்தில் இல்லை. விபத்தில் கால்கள்  செயலிழந்த நிலையில் அவர் இப்போது சக்கர நாற்காலியில் நடமாடுகிறார். பேசவும் இயலாது. இந்த ஐந்தாம் பாகத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, தில்லீஷ் போத்தன், சவுபின் ஷகீர், ஆஷா சரத் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்திய சினிமாவில் முதல் ஐந்தாம் பாகம் இது என்பது முக்கியமானது.

மேலும் செய்திகள்