சமுத்திரக்கனியின் பப்ளிக்

நடிகர்-டைரக்டர் சமுத்திரக்கனி நடித்துள்ள புதிய படத்துக்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அறிமுக டைரக்டர் ரா.பரமன் இயக்கியிருக்கிறார்.

Update: 2022-01-21 09:27 GMT
இதில் சமுத்திரக்கனி கதைநாயகனாக நடித்து இருக்கிறார். அவருடன் காளி வெங்கட், ரித்விகா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே.கே.ரமேஷ் டைரக்டு செய்துள்ளார்.

இதுபற்றி டைரக்டர் பரமன் கூறியதாவது:

‘‘தமிழ் திரையுலகில் அரசியலை வைத்தும், அரசியல் தலைவர்களை வைத்தும் பல படங்கள் வந்துள்ளன. அரசியல் கட்சியில் பணிபுரியும் தொண்டர்களை பற்றிய கதை, இது.’’

மேலும் செய்திகள்