ஓடிடியில் வெளியாகிறது விஜய்சேதுபதியின் 'மும்பைக்கர்'..!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மும்பைக்கர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Update: 2022-01-26 17:13 GMT
சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'மாநகரம்'. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்த திரைப்படம் தற்போது இந்தியில் 'மும்பைக்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக விக்ராந்த் மாஸே நடித்துள்ளார். 




மேலும் இந்த திரைப்படத்தில் தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் 'மும்பைக்கர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'மும்பைக்கர்' திரைப்படம் ஜியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்