வெப் தொடரில் அதர்வா

முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த வரிசையில் அதர்வாவும் வெப் தொடரில் நடிக்கிறார்.

Update: 2022-03-04 12:49 GMT
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சமந்தா, பிரியாமணி நடித்த பேமிலிமேன்-2 வெப் தொடர் ரசிகர்களை கவர்ந்தது. பொன்னியின் செல்வன் நாவலை ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா வெப் தொடராக எடுக்கிறார். சூர்யா, சரத்குமார், விஜய்சேதுபதி, சத்யராஜ், பிரசன்னா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். 

இந்த வரிசையில் அதர்வாவும் வெப் தொடரில் நடிக்கிறார். இந்த தொடரை பிரசாத் முருகேசன் இயக்குகிறார். திகில் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதே படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. தற்போது குருதி ஆட்டம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்கிறார்.

மேலும் செய்திகள்