பன்மொழி படங்களில் வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார் தமிழ் படங்களில் நடிப்பது போல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.;

Update:2022-04-08 15:16 IST
கதாநாயகி, வில்லி என அவருக்கு பொருந்துகிற எந்த வேடமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு தன் திறமையை காட்டி வருகிறார். இதனால் அவருக்கு புது பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. சமீபத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம், ‘சபரி.’ இது காதல் மற்றும் கிரைம் கலந்த புதிரான கதை . வரலட்சுமி சரத்குமாருடன் கணேஷ் வெங்கட்ராமன், மைம்கோபி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐதராபாத், விசாகப்பட்டினம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்