பழம்பெரும் பிரெஞ்சு நடிகை காலமானார் - ரசிகர்கள் இரங்கல்

வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக பிரிகிஎட் பார்டொட் இன்று காலமானார்.;

Update:2025-12-28 19:09 IST

பாரிஸ்,

பழம்பெரும் பிரெஞ்சு நடிகை பிரிகிட் பார்டொட் (வயது 91). இவர் 1952ம் ஆண்டு முதல் 1973 வரை பிரெஞ்சு மொழியில் பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர், சினிமா துறையில் இருந்து விலகிய பிரிகிட் பார்டொட் விலங்குகள் நல ஆர்வலராக திகழ்ந்தார்.

இந்நிலையில், நடிகை பிரிகிட் பார்டொட் இன்று காலமானார். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக பிரிகிஎட் பார்டொட் இன்று காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்