ரஜினியுடன் ’முதல் மரியாதை’போல ஒரு படம்...மனம் திறந்த ‘பராசக்தி’ பட இயக்குனர்

‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;

Update:2025-12-28 20:43 IST

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ’பராசக்தி’. இதில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், ரஜினிகாந்துடன் பணியாற்ற விரும்புவதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்தார். தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை என்றும், முதல் மரியாதை (1985) படத்தைப் போலவே அவருடன் ஒரு முழுமையான காதல் படத்தை இயக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

’பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்