பிரபாஸ் கொடுத்த பரிசு...மூன்று வருடங்களாக மறைத்து வைத்திருந்த நடிகை

பிரபாஸ் அடுத்து ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-12-28 20:04 IST

சென்னை,

இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்து ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் ஹீரோ பிரபாஸ் உட்பட முழு படக்குழுவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், மூன்று கதாநாயகிகளும் பிரபாஸைப் பற்றிப் பேசினர். அந்த வகையில், நடிகை ரித்தி குமார் தெரிவித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன.

அவர் பேசுகையில், ‘பிரபாஸுடன் ஒரு படம் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னாடி அவர் எனக்கு பரிசளித்த சேலையைதான் இப்போது இங்கு அணிந்து வந்திருக்கிறேன்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்