சீரியல் நடிகை ராணி மீது வழக்குப்பதிவு

அலைகள் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராணி.;

Update:2025-12-29 14:29 IST

கரூர் ,

பிரபல சீரியல் நடிகை ராணி மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அலைகள் என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராணி. அதை தொடர்ந்து அத்திப்பூக்கள், முன் ஜென்மம், வள்ளி, குலதெய்வம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். பல சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார்.

இந்நிலையில், கரூர் ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ராணி, அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார், 5 சவரன் நகையையும் வாங்கி சீரியல் நடிகை ராணி ஏமாற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்