நடிகர் ஷாருக்கான் நலமுடன் உள்ளார்: மேலாளர் தகவல்

ஷாருக்கான் நலமுடன் உள்ளார் என அவரது மேலாளர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 11:02 GMT

அகமதாபாத்,

பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் திடீர் உடல்நலக் குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த குவாலிபயர் 1 போட்டியை ஷாருக் கான் நேரடியாகக் கண்டுகளித்து, கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில் , வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் நலமுடன் உள்ளார் என அவரது மேலாளர் பூஜா தத்லானி தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்