நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்

'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-12 08:33 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், 'அயலான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்