’யாருடைய அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை’...ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி

ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி ஷியாமலி தேவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன.;

Update:2025-12-05 18:27 IST

சென்னை, 

நட்சத்திர நடிகை சமந்தா சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்த சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவை மணந்தார். இவர்களது திருமணம் கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் நடந்தது

கடந்த சில நாட்களாக, அவர்களின் திருமணம் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இருப்பினும், அவர்களின் திருமண நாளிலிருந்து, ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவி ஷியாமலி தேவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இந்த சூழலில், அவரது சமீபத்திய பதிவு இப்போது வைரலாகி வருகிறது. இந்த நேரத்தில் தன்னுடன் நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ராஜ் நிடிமோருவின் திருமணத்திற்குப் பிறகு எல்லோரும் தன் மீது பரிதாபப்படுகிறார்கள் எனவும் ஆனால், யாருடைய அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்