தொடர்ந்து வெற்றிப்படங்கள் - சம்பளத்தை உயர்த்திய அனுபமா

நடிகை அனுபமா தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருவதால் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.;

Update:2024-05-08 17:28 IST

image courtecy:instagram@anupamaparameswaran96

சென்னை,

பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபாமா. இவர் மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். கடந்த 9 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'டில்லு ஸ்கொயர்'.

இதில் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சித் தாரகையாகத் தோன்றியிருந்தார். படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைத்து 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்நிலையில், நடிகை அனுபமா நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'கார்த்திகேயா 2' மற்றும் 'டில்லு ஸ்கொயர்' படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அனுபமா ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது அதனை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை அனுபமா தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


Tags:    

மேலும் செய்திகள்