நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம்...?

கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.;

Update:2023-10-21 11:45 IST

Image Credits: karthika_nair9

சென்னை,

தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகா தமிழில் ஜீவா ஜோடியாக 'கோ' படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அருண் விஜய்யுடன் 'வா டீல்' படத்தில் நடித்தார்.

பாரதிராஜா இயக்கிய 'அன்னக்கொடி', ஆர்யா, விஜய்சேதுபதியுடன் 'புறம்போக்கு' என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாப்பிள்ளை யார் என்ற விவரம் தெரியவில்லை. அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்